100. Pirandhar Or Balagan - பிறந்தார் ஓர் பாலகன் - (கீகீ 100)

கீதங்களும் கீர்த்தனைகளும் 100

 
1. பிறந்தார் ஓர் பாலகன்,
    படைப்பின் கர்த்தாவே;
  வந்தார் பாழாம் பூமிக்கு
  எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
    அவரைக் கண்ணோக்கும்;
  ஆண்டவர் என்றறியும்
  ஆவோடிருந்த பாலன்.

3. பயந்தான் ஏரோதுவும்
    பாலன் ராஜன் என்றே;
  பசும் பெத்லேம் பாலரை
  பதைபதைக்கக் கொன்றே.

4. கன்னி பாலா வாழ்க நீர்!
    நன்னலமாம் அன்பே!
  பண்புடன் தந்தருள்வீர்
  விண் வாழ்வில் நித்திய இன்பே.

5. ஆதி அந்தம் அவரே,
    ஆர்ப்பரிப்போம் நாமே;
  வான் கிழியப் பாடுவோம்
  விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.

 

#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil



Comments