83 Varavenum Enatharase - வர வேணும் என தரசே - (கீகீ 83)

கீதங்களும் கீர்த்தனைகளும் 83


 வர வேணும், என தரசே,
 மனுவேல், இஸ்ரவேல் சிரசே.

 அருணோ தயம் ஒளிர் பிரகாசா,
 அசரீரி ஒரே சரு வேசா! - வர

1. வேதா, கருணா கரா, மெய்யான
   பரா பரா,
  ஆதார நிராதரா, அன்பான சகோ தரா,
  தாதாவும் தாய் சகலமும் நீயே;
  நாதா, உன் தாபரம் நல்குவாயே. - வர

2. படியோர் பவ மோசனா,
   பரலோக சிம்மாசனா,
  முடியா தருள் போசனா,
   முதன் மா மறை வாசனா,
  இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
  இமையவர் அடி தொழு
   மேன்மையின் எந்தாய், - வர

3. வானோர் தொழும் நாதனே,
   மறையாகம போதனே,
  கானாவின் அதீதனே கலிலேய வினோதனே,
  ஞானாகரமே, நடு நிலை யோவா,
  நண்பா, உனத நன்மையின்
   மகா தேவா! - வர


#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil

Comments