84. Salemin Rasa - சாலேமின் ராசா - (கீகீ 84)

கீதங்களும் கீர்த்தனைகளும் 84

 
1. சாலேமின் ராசா,
  சங்கையின் ராசா, ஸ்வாமி
   வாருமேன், ஸ்வாமி,
   வாருமேன் - இந்தத்
  தாரணி மீதினில் ஆளுகை செய்திடச்
   சடுதி வாருமேன் - சா

2. சீக்கிரம் வருவோமென்று
   ரைத்துப்போன
   செல்வக்குமாரனே, - இந்தச்
  சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற
   செய்திகேளீரோ? - சா

3. எட்டி எட்டி உம்மை
  அண்ணாந்து பார்த்துக்
   கண்பூத்துப் போகுதே; - நீர்
  சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம்
   நிறைவேறலாகுதே, - சா

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை
   நாடித்தேடுதே; - இந்த
  நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள்
   தேடிவாடுதே. - சா  

5. சாட்சியாகச் சுபவிசேஷம்
   தாரணிமேவுதே; - உந்தஞ்
  சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
   தாவிக்கூவுதே - சா


#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil

Comments