கீதங்களும் கீர்த்தனைகளும் 88
1. மேலோக ராஜன்
வருங்காலமாகுது
சாலோக மகிமை பெறலாம்
பாவி ஓடிவா!
2. பாவம் நித்தமும் மனம்
நோகச் செய்யுது
பரிசுத்தரித்தரையில் வந்தால்
முற்றும் நீங்கிடும்.
3. இரவு போயிற்று பகல்
சமீபமாயிற்று
இருளின் செய்கை தள்ளி
ஒளியின் கவசம் தரிப்போம்
4. குடிவெறி வேண்டாம் கோள்
குண்டணி வேண்டாம்
பகலின் பிள்ளைகள்போல்
சீராய் நடக்கக்கடவோம்.
5. எருசலேம் நகர் மகா அரசர்
மாளிகை
அதை ஏறிட்டுக் கண்ணாலே
பார்த்தால் ஏக்கம் தீருமே.
6. ஏழுடுகையில் மார்பருகே
பொற்கச்சை
வெண்பஞ்சு நிறமாம் சிரசு
ஏசுவுக்குண்டு.
7. தூதர் சேனைகள் துதி
பாடும் ஓசையால்
இப்பூதலம் திடுக்கிட
வானோர்கள் மகிழ.
8. ஆசனங்களில் ஏசு தாசரிருப்பார்
அதன் மத்தியிலோர் ஆசனம்
இம்மானுவேலர்க்கு.
9. பார்க்கக் கூடாத பரிசுத்த
ஜோதியாய்
பரலோக ராஜன் வீற்றிருப்பார்
தூதர்கள் சூழ.
10. ஒப்பார்சின் தங்கச் கச்சை
இடையிற் கட்டியே
உம்பர்கள் ஒழுங்காக நின்று
கீதம் பாடுவார்.
Comments
Post a Comment