89. Mannuyirkagath Thannuyir - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் - (கீகீ 89)

கீதங்களும் கீர்த்தனைகளும் 89

 
1. மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
  வல்ல பராபரன் வந்தார்,
   வந்தார். - பாரில்

2. இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
  ஏகபராபரன் வந்தார்,
   வந்தார். - பாரில்

3 வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்,
  மகிமைப் பராபரன் வந்தார்,
   வந்தார். - பாரில்

4. நித்திய பிதாவின் நேய குமாரன்
  நேமி அனைத்தும் வாழ வந்தார்,
   வந்தார். - பாரில்

5. மெய்யான தேவன், மெய்யான மனுடன்,
  மேசியா, ஏசையா வந்தார்,
   வந்தார். - பாரில்

6. தீவினை நாசர், பாவிகள் நேசர்,
  தேவ கிறிஸ்தையா வந்தார்,
   வந்தார். - பாரில்

7. ஜெய அனுகூலர், திவ்விய பாலர்,
  திரு மனுவேலனே வந்தார்,
   வந்தார். - பாரில்


#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil

Comments