97. Diya Balan Pirandheere - திவ்விய பாலன் பிறந்தீரே - (கீகீ 97)

கீதங்களும் கீர்த்தனைகளும் 97


1. திவ்விய பாலன் பிறந்தீரே,
    கன்னி மாதா மைந்தன் நீர்
  ஏழைக் கோலம் எடுத்தீரே;
    சர்வ லோகக் கர்த்தன் நீர்.

2. பாவ மாந்தர் மீட்புக்காக
    வான மேன்மை துறந்தீர்;
  திவ்யபாலா, தாழ்மையாக
    மண்ணில் தோன்றி ஜெனித்தீர்.

3. லோக ராஜா வாழ்க வாழ்க,
    செங்கோல் தாங்கும் அரசே!
  பூமியெங்கும் ஆள்க, ஆள்க,
    சாந்த பிரபு, இயேசுவே!

4. தேவரீரின் ராஜ்யபாரம்
    நித்திய காலமுள்ளது;
  சர்வ லோக அதிகாரம்
    என்றும் நீங்கமாட்டாது.

5. வல்ல கர்த்தா பணிவோடு
    ஏக வாக்காய் போற்றுவோம்;
  நித்திய நாதா பக்தியோடு
    நமஸ்காரம் பண்ணுவோம்.

6. ஸ்தோத்திரம், கர்த்தாதி கர்த்தா,
    ஞானத்துக்கெட்டாதவர்;
  ஸ்தோத்திரம், ராஜாதி ராஜா,
    ஆதியந்தமற்றவர்.

 

#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil



Comments